பெண் கேட்டு வருவது போல எம்.பி சீட் கேட்டு வருகின்றனர்! – கூட்டணிக் கட்சிகளை கலாய்த்த எடப்பாடி பழனிசாமி

 

பெண் கேட்டு வருவது போல எம்.பி சீட் கேட்டு வருகின்றனர்! – கூட்டணிக் கட்சிகளை கலாய்த்த எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க நேற்று எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர், “கமலுக்கு தமிழகத்தில் எத்தனை அரசுத் துறைகள் இருக்கின்றது என்றே தெரியாது. அவருக்கு சினிமா துறை மட்டும்தான் தெரியும். நான் ஒரு விவசாயி, விவசாயியாகத்தான் வருமான வரியை தற்போது வரை கட்டி வருகின்றேன்.

வீட்டில் வயது வந்த பெண் இருந்தால், பெண் கேட்டு வருவது போல கூட்டணி கட்சியினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க நேற்று எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர், “கமலுக்கு தமிழகத்தில் எத்தனை அரசுத் துறைகள் இருக்கின்றது என்றே தெரியாது. அவருக்கு சினிமா துறை மட்டும்தான் தெரியும். நான் ஒரு விவசாயி, விவசாயியாகத்தான் வருமான வரியை தற்போது வரை கட்டி வருகின்றேன். எம்.எல்.ஏ சம்பளத்தில்தான் அந்த வரியைக் கட்டினேன். இதில் இருந்தே நான் விவசாயி என்பதை அறியலாம்.

eps-in-ramanathapuram

மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குரங்கு கதை ஒன்றை கூறியுள்ளார். அவரது எண்ணங்கள் எப்படியோ அதுபோலவே உதாரணம் காட்டி இருக்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மிகத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன். என்.ஆர்.பி 2003ல் பா.ஜ.க கூட்டணியில் தி.மு.க இருந்தபோது வந்தது. அதில் தந்தை பிறப்பிடம், ஆதார், குடும்ப வாக்காளர் அட்டை விவரங்களை சமர்ப்பிக்க கேட்டுள்ளார்கள். விரும்பியவர்கள் அந்த விவரங்களை கொடுக்கலாம்… கொடுக்காமலும் இருக்கலாம்” என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி தருவது பற்றி கேட்டபோது, “வீட்டில் பெண் இருந்தால், அனைவரும் பெண் கேட்டு வருவார்கள். இது வழக்கம்தான். அதுவும் நல்ல பெண்ணாக இருந்தால் பெண் கேட்டு வருவது வழக்கம்தான். அதுபோலதான், கூட்டணியில் உள்ளவர்கள் மாநிலங்களவை சீட் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதுபற்றி கட்சி தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும்” என்றார்.