பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடும் திருவிழா! மதுரையில் களைகட்டவுள்ள விநோதம்!!

 

பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடும் திருவிழா! மதுரையில் களைகட்டவுள்ள விநோதம்!!

பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடும் திருவிழா! மதுரையில் களைகட்டவுள்ள விநோதம்!!

மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி 62 கிராம மக்கள் சேர்ந்து பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடும் திருவிழாவை கொண்டாடவுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வெள்ளலூர், உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, அம்பலகாரன்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட 62 கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது பாரம்பரிய முறைப்படி பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கான குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி இன்று வெள்ளலூரில் உள்ள ஏழை காத்த அம்மன் கோவில் வீட்டில் நடைபெற்றது. இதற்காக 62 கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அம்மன் போல அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

கோவில் திருவிழா

இதனை தொடர்ந்து, கிராம நாட்டார்கள் முன்னிலையில் கோவில் பூசாரி சின்னதம்பி, அம்மனாக வழிபாடு செய்வதற்கு 7 பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்தார். அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவ் திருவிழாவிற்காக வெள்ளலூர் கோவில் வீட்டில் இருந்து இந்த 7 குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பெண்கள் மது கலயம் எடுத்து 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். அக்டோபர் 2 ஆம் தேதி தேரோட்டமும், அக்டோபர் 3 ஆம் தேதி தெய்வங்களுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.