பெண் குழந்தைகளிடம் ஆபாசமாகப் பேசிய கோவை தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்..

 

பெண் குழந்தைகளிடம் ஆபாசமாகப் பேசிய கோவை தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்..

கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்களை சாதியின் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் குறிப்பாக பட்டியலின மாணவ்ர்கலை கழிவறைகளைச் சுத்தம் செய்யச்சொல்லித்  துன்புறுத்தியதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

school students

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில், கரட்டு மேடு கந்தசாமி நகர் என்னும் இடத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் திங்கள் கிழமை (24.06.2019) பெற்றோருடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி என்பவர் பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களை சாதியின் பெயரால் இழிவுபடுத்துவதாகவும், கழிப்பறைகள் சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

coimbatore

அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு இன்று ஆசிரியை ஜெயந்தியின் மீது பணி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து புகார் அளித்த மாணவர் ஒருவரின் பெற்றோர் கூறுகையில், இந்த ஆசிரியை பள்ளிக்கு நான்கைந்து வருடங்களாகவே இந்த பிரச்சனைகள் தொடர்ந்து நடக்கின்றது. காலனியில் இருந்து வருகின்ற மாணவர்களை சாதியின் பெயரை சொல்லி திட்டுவதாகவும், அடிப்பதாகவும் பிள்ளைகள் வீட்டிற்கு வந்து அழுகின்றனர். இது குறித்து கேட்டால் முதலில் அப்படியெல்லாம் இல்லை என்றவர் இப்பொழுது கேட்டால் எங்களையும் மிரட்டுகிறார் என்றார்.

இச்செய்தி குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமூக செயல்பட்டாளர் வின்சென்ட் ராஜ்,…சாதி என்கிற கொடிய நச்சு குழந்தைகளின் மாண்புகளை கொன்று புதைக்கிறது. கோயம்புத்தூர் அருகில் உள்ள சரவணம்பட்டி – சிபி கந்தசாமி நகரில் அமைந்துள்ளது மாநகராட்சி ஆரம்ப பள்ளி. இந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி என்பவர் தலித் குழந்தைகள் மீது கடுமையான சாதிய வன்கொடுமையை நடத்தியிருக்கிறார். 

coimbatore

அடிப்பது, இழிவாக பேசுவது, கழிவறையை சுத்தம் செய்ய சொல்வது போன்ற கொடுமைகள் ஒரு பக்கம் என்றால் ஆபாசமாக பெண் குழந்தைகளை பேசி அவமானப்படுத்தியிருக்கிறார். இந்த பள்ளிக்கூடத்தில் 42 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டு இப்பள்ளிக்கூடத்திற்கு பொறுப்பேற்ற தலைமை ஆசிரியர், தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கிறார். எழுதுவதற்கு கூசுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலில் இருக்கின்றனர். அப்பகுதி தலித்துகள் வேதனையில் தவிக்கின்றனர். இன்று அந்த பகுதிக்கு நேரடியாக சென்றேன். அந்த தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரும் இந்த பாகுபாட்டிற்கு பொறுப்பேற்ற வேண்டும் என்று அழுத்தமாக கண்டனத்தை பதிவு செய்தேன். அந்த தலைமை ஆசிரியருடன் பணி செய்த பல்வேறு ஆசிரியர்களிடமும் விசாரணையில் ஈடுபட்டேன். களத்திற்கு சென்று திரும்புகிற நேரத்தில் அந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்கிற செய்தி வந்தது. மனதிற்கு ஆறுதல்’என்று பதிவிட்டுள்ளார்.