பெண் குற்றவாளியை நீதிமன்றத்திலேயே கட்டிப்பிடித்து தழுவி…

 

பெண் குற்றவாளியை நீதிமன்றத்திலேயே கட்டிப்பிடித்து தழுவி…

சகோதரனை கொன்ற பெண் காவலரை தாயுள்ளத்தோடு தம்பி மன்னித்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்துள்ளது.

சகோதரனை கொன்ற பெண் காவலரை தாயுள்ளத்தோடு தம்பி மன்னித்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்துள்ளது.

டல்லாஸ் மாகாணத்தில் பெண் காவலர் ஆம்பர் என்பவர் வசித்து வந்தார். 2018ம் ஆண்டு வீட்டின் அருகே வசித்து வந்த கருப்பினத்தை சேர்ந்த ஜீன் என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். பெண் காவலர் செய்த அந்த செயல் கருப்பினத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என போராட்டம் வெடித்தது. ஆனால் தனது வீட்டுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கருதித்தான் பயத்தில் தற்காப்புக்காக ஜீனை கொலை செய்ததாக பெண் காவலர் ஆம்பர் கூறியிருந்தார்.

tellascourt

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பெண் காவலர் ஆம்பர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதை அடுத்து பெண் காவலர் ஆம்பருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி டெல்லாஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே ஆம்பரால் கொல்லப்பட்ட ஜீன் குடும்பம் சார்பில் நீதிமன்றம் வந்த அவரது தம்பி, ஆம்பரை தான் மன்னித்து விட்டதாகவும், அவரை அரவணைத்து ஆறுதல் கூற நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு நீதிபதி அனுமதி தரவே இருவரும் நீதிமன்றத்தில் ஆரத்தழுவிக் கொண்டனர். இதையடுத்து ஆம்பர் கண்ணீர் விட்டு அழுதார. நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சி சம்பவம், ஜீனின் குடும்பத்தினரையும் கண்கலங்க வைத்தது. ஆனாலும் ஆம்பரின் சிறை தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.