பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை… சிபிஐ விசாரிக்க தேவையில்லை!

 

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை… சிபிஐ விசாரிக்க தேவையில்லை!

முதல்வர் பழனிசாமிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பெண் எஸ்.பி ஒருவருக்கு டிஜிபி அந்தஸ்திலான காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு விசாகா கமிட்டியை அமைத்த அதே வேளையில் வழக்கு சிபிசிஐடி வசம் மாறியது.

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை… சிபிஐ விசாரிக்க தேவையில்லை!

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை பெண் அதிகாரிகளுக்கே இப்படி ஒரு நிலைமையா? என அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இதனிடையே, பெண் எஸ்.பியை புகாரளிக்க விடாமல் தடுத்த மாவட்ட எஸ்.பி பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து கேள்வியெழுப்பிய நீதிமன்றம், கேள்வியால் அரசை துளைத்தெடுத்தது.

இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், ராஜேஷ் தாஸுக்கு எதிரான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டுமென மனுதாரர் கோரியிருந்தார். தனி நீதிபதி இந்த வழக்கை நேரடியாக கண்காணித்து வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என தெரிவித்து விட்டது.