பெண் இயக்குநர் ஹலீதா ஷமீம் அடுத்தப்படம் ‘ஏலே’!

 

பெண் இயக்குநர் ஹலீதா ஷமீம்  அடுத்தப்படம் ‘ஏலே’!

ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஏலே’. இப்படத்தை புஷ்கர்- காயத்ரியுடன் இணைந்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த்தும் தயாரித்துள்ளார்.

‘ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் – காயத்ரி.  அதன்பிறகு ‘வ குவார்ட்டர் கட்டிங்’  ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினர். இதில் விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதோடு, விருதுகளையும் வாரி குவித்தது. சமீபத்தில் இவர்கள் வால் வாட்சர் பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினர். 

 

இந்நிலையில்  புஷ்கர்-காயத்ரியிடம் முன்னாள் உதவி இயக்குநராக பணியாற்றிய ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஏலே’. இப்படத்தை புஷ்கர்- காயத்ரியுடன் இணைந்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த்தும் தயாரித்துள்ளார்.

சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.  தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் ஹலீதா ஷமீம் தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்டருடன் தெரிவித்துள்ளார். 

ttn

 

முன்னதாக ஹலீதா ஷமீம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற   பூவரசன் பீப்பி, சில்லுக்கருப்பட்டி  படங்களை  இயக்கியது குறிப்பிடத்தக்கது.