பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு: நடந்தது என்ன?

 

பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு: நடந்தது என்ன?

பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட கோயம்பேடு காவல் நிலைய தலைமை காவலர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட கோயம்பேடு காவல் நிலைய தலைமை காவலர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி(37). இந்த பெண்ணை என்.எஸ்.கே.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கவைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த தலைமைக்காவலர் பார்த்திபன், அந்த பெண்ணிடம் வரும் வாடிக்கையாளர்களை மிரட்டி, பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெண் மீது விபச்சாரம், கொலை மிரட்டல் மற்றும் வழிப்பறி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்த தலைமைக் காவலர் பார்த்திபன் மீதும், கூட்டுச் சேர்ந்து விபச்சாரம் செய்தல், வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, தலைமைக் காவலர் பார்த்திபன் மற்றும் பாலியல் தொழில் செய்த பெண் தலைமறைவாகிவிட்டதாக கூறியுள்ள போலீசார், அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய நிலையில் இருந்து கொண்டு, இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடும் சில நபர்களால், ஒட்டுமொத்த காவல்துறைக்கே கலங்கம் ஏற்படுவதாக சக காவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.