பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா பணியிடை நீக்கம்; பிஎஸ்என்எல் அதிரடி

 

பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா பணியிடை நீக்கம்; பிஎஸ்என்எல் அதிரடி

சபரிமலை செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் பணிபுரிந்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

திருவனந்தபுரம்: சபரிமலை செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் பணிபுரிந்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், சில பெண்கள் சபரிமலை செல்ல முயன்றனர். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள், அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

அந்த வகையில், கொச்சியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா இரு முடியுடன் கோயிலுக்குள் செல்ல முயன்ற போது போராட்டக்கரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரெஹானா பாத்திமாவை கேரளா போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், அவர் வேலை செய்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் ரெஹானா பாத்திமாவை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.