பெண்ணின் வயிற்றிலிருந்த “20 கிலோ புற்றுநோய் கட்டி”.. உடையாமல் நீக்கி மருத்துவர்கள் சாதனை !

 

பெண்ணின் வயிற்றிலிருந்த “20 கிலோ புற்றுநோய் கட்டி”.. உடையாமல் நீக்கி மருத்துவர்கள் சாதனை !

இந்த மருத்துவமனையின் 175 வருட அனுபவத்தில் இவ்வளவு பெரிய கட்டியை வெற்றிகரமாக நீக்கியது இதுவே முதன்முறை என்று தெரிவித்துள்ளனர். 

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரதி என்பவருக்கு வயது 51. இவர் கடந்த 7 ஆண்டுகளாக கடும் வயிற்று வழியில் துடித்து வந்துள்ளார். ஆனால், சாதாரண வயிற்று வலியாக இருக்கும் என்று எண்ணி மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். கடந்த மாதம் இவருக்கு வயிற்று வலி வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. அதனால் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை சென்றுள்ளார். 

ttn

அங்கு இவரைச் சோதித்த மருத்துவர்கள் வயிற்றில் 20 பெரிய சினைப்பைக்கட்டி இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, வயிற்றில் இருக்கும் அந்த கட்டி புற்றுநோய்க் கட்டி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி ரதி, அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 மணி நேரச் சிகிச்சைக்குப் பிறகு அந்த கட்டியை உடையாமல் மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். அதன்பின்னர், அந்த கட்டி 20 கிலோ எடையுடன் இருந்துள்ளது. 

ttn

இது குறித்துப் பேசிய மருத்துவர்கள், இந்த மருத்துவமனையின் 175 வருட அனுபவத்தில் இவ்வளவு பெரிய கட்டியை வெற்றிகரமாக நீக்கியது இதுவே முதன்முறை என்றும் சினைப்பைக் கட்டிகள் குறித்து ஆரம்ப நிலையிலேயே அனைத்து பெண்களும் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.