பெண்ணின் மானத்தை காப்பாற்ற இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன்!

 

பெண்ணின் மானத்தை காப்பாற்ற இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன்!

திருவள்ளூர் மாவட்டம் மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் நரசிங்கபுரம் செல்வதற்காக மப்பேடு என்கிற இடத்தில் காத்திருந்தார். அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார். நரசிங்கபுரம் செல்லும் வழியில் மற்றவர்கள் எல்லாம் இறங்கிக்கொள்ள, இந்த பெண் மட்டும் தனியாக பயணித்துள்ளார். அப்போது ஷேர் ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி என்கிற பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக சென்றது. ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பெண், வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இளம் பெண்ணின் மானத்தைக் காக்க உயிரை விட்ட இளைஞன் பற்றிய தகவல் அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் நரசிங்கபுரம் செல்வதற்காக மப்பேடு என்கிற இடத்தில் காத்திருந்தார். அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார். நரசிங்கபுரம் செல்லும் வழியில் மற்றவர்கள் எல்லாம் இறங்கிக்கொள்ள, இந்த பெண் மட்டும் தனியாக பயணித்துள்ளார். அப்போது ஷேர் ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி என்கிற பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக சென்றது. ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பெண், வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால், தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார். அப்போது கொண்டஞ்சேரியில் சாலையில் நின்றுகோண்டிருந்த இளைஞர்கள் யாகேஷ் என்பவரும், அவரது நண்பர்கள் எஸ்தர் பிரேம்குமார், வினீத், துரைராஜ், சார்லி பிராங்க்ளின் ஆகியோரும் அந்த ஷேர் ஆட்டோவை விரட்டினர். இவர்கள் பின் தொடர்வது தெரிந்து ஆட்டோ இன்னும் வேகம் எடுத்தது. 
ஓர் இடத்தில் எதிரில் வந்த வாகனத்திற்காக சற்று மெதுவாகச் சென்றபோது அந்தப் பெண் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பினார். அந்த ஷேர் ஆட்டோ நிற்காமல் விரைந்தது. நண்பர்கள் சிலர் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, யாகேஷும், சார்லி பிராங்க்ளினும் அந்த ஷேர் ஆட்டோவை துரத்திச் சென்று நிறுத்தினர். பிடிபடுவோம் என்று தெரிந்ததும் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர், யாகேஷ் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதித் தள்ளிவிட்டு தப்பினார். இதில் யாகேஷ் படுகாயம் அடைந்தார்.  உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிலைமை மோசமடையவே, அவரை சென்னைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட யாகேஷ், சனிக்கிழமை இரவு உயிர் இழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த கேசவன் என்கிற ஷேர் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் காட்டியிருக்கிறார் மறைந்த கொண்டஞ்சேரி யாகேஷ். பெண்மையின் கற்பையும் மானத்தையும் பாதுகாக்க தனது இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கும் யாகேஷின் துணிவுக்கு “தினமணி’ தலைவணங்குகிறது என்று தினமணி நாளிதழ் பதிவு செய்துள்ளது.