பெண்கள் விடுதியில் பாலியல் தொல்லை: பெண் வார்டனை புரட்டி எடுத்த தாய்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

பெண்கள் விடுதியில் பாலியல் தொல்லை: பெண் வார்டனை புரட்டி எடுத்த தாய்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

பெண்கள் விடுதியில் தங்கி இருக்கும் பெண்களை பப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வார்டன் மீது புகார் எழுந்துள்ளது.

சென்னை: பெண்கள் விடுதியில் தங்கி இருக்கும் பெண்களை பப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வார்டன் மீது புகார் எழுந்துள்ளது.

பெண்கள் விடுதி:

abuse ttn

 

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூர வழக்கு பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தொடர்ந்து இதே போன்றே சம்பவம் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அரங்கேறியுள்ளது.  சென்னையை பூந்தமல்லியில் ஆராதனா பெண்கள் விடுதியில் அமைந்துள்ளது. இதன் வார்டனாக ஆனந்தி என்பவரும் பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாமஸ், ஆறுமுகம், கிருஷ்ணா உள்ளிட்டோரும் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை:

abuse ttn

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வரும் தனது மகளை இந்த விடுதியில் தங்குவதற்குச் சேர்த்துள்ளார். விடுதியின்  வார்டன்  ஆனந்தி இங்குள்ள பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி வசதிபடைந்த இளைஞர்களின் நட்பை ஏற்படுத்தித் தருவதாக  நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பப்புகளுக்கும், பார்ட்டிகள் நடக்கின்ற பண்ணை வீடுகளுக்கும் அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கும்பல் நேரடியாகப் பெண்கள் தங்கும் விடுதிக்கே சென்று தேர்வு செய்து விட்டு எந்த பெண்ணை அழைத்து வரவேண்டும் என்பதையும் செல்போனில் தகவல் சொல்லும் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் அந்த விடுதியில் தங்கி இருந்த மதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை அந்த கும்பல் தேர்வு செய்து அழைத்து வர வற்புறுத்தி உள்ளது. ஆனால்  அந்த பெண் ஒத்துழைப்பு கொடுக்காததால், அடித்து விடுதியை விட்டு ஆனந்தி துரத்தியுள்ளார்.

வார்டனை தாக்கிய மாணவியின் தாய்:

ananthi ttn

இதையடுத்து இது குறித்து நியாயம் கேட்க வந்த அப்பெண்ணின் தாயிடமும் தகராறு செய்ததால், வார்டன் ஆனந்தியை அவளது தாயார் அடித்த துவைத்துள்ளார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட மாணவி தன்னுடன் படிக்கின்ற ஆண் நண்பர்களை அழைத்து வந்து விடுதியில் ரகளை செய்ததால் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வார்டன் ஆனந்தி புகாரில் தெரிவித்துள்ளதோடு, பெண்கள் விடுதிக்குள் புகுந்து வார்டனை தாக்கியதாக மாணவி மற்றும் மாணவியின் தாய் மீது பூந்தமல்லி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

சூழ்நிலை காரணமாக, பாதுகாப்பு கருதி பெண் பிள்ளைகளை   தங்கும் விடுதியில் அவர்களது குடும்பத்தினர் விட்டுவிட்டுச் செல்லும்  நிலையில், இது போன்ற சிலரின் வக்கிர புத்தியால் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.