பெண்கள் பாதுகாப்பு பேரணி: நடிகை நயன்தாரா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!

 

பெண்கள் பாதுகாப்பு பேரணி: நடிகை நயன்தாரா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!

பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களின் சிறப்பை போற்றிடும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (இன்று) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ttn

தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களின் சிறப்பை போற்றிடும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ttn

இந்நிலையில்  வருமான வரித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரம் குறித்த விழிப்புணர்வு  பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.  

ttn

சுமார் 500க்கும்  மேற்பட்ட பெண்கள்  பங்கேற்ற இந்த பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

ttn

இந்த பேரணியானது எத்திராஜ் சாலை வழியாக கல்லூரி சாலை சென்று நுங்கம்பாக்கம் பகுதியில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.