பெண்கள் பகலில் நைட்டி அணிந்தால் ரூ. 2000 அபராதம்: எதிர்க்கும் மகளிர் சங்கங்கள்!

 

பெண்கள் பகலில் நைட்டி அணிந்தால் ரூ. 2000 அபராதம்: எதிர்க்கும் மகளிர் சங்கங்கள்!

ஆந்திரா: ஆந்திரா மாநிலத்தில் ஒன்றில் பெண்கள் பகலில் நைட்டி அணிந்து நடமாட தடை விதித்தும், மீறினால் 2000 ரூபாய் அபராதம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேக்கலப்பள்ளி கிராமத்தில் நைட்டி அணிந்து பெண்கள் நடமாட தடை விதித்து கிராம பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.கிராம பஞ்சாயத்து உத்தரவை மீறி யாராவது நைட்டி அணிந்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நைட்டி அணிந்தது குறித்து  தெரிவித்தால் 1000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறக்கூடிய அபராத தொகையை கிராம வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் எனத் தண்டோரா அடித்து பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்த முடிவு பெண்களுக்கு எதிரானது எனப் பல மகளிர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து  வட்டாசியர் சுந்தர்ராஜ், எஸ்.ஐ. விஜயகுமார் கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையின் போது இதை எதிர்த்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை. அதனால்  அதிகாரிகளும் போலீசாரும் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.