பெண்கள் நைட் ஷிப் வேலைக்கு சென்றால் கேன்சர் வருமா?-  ஆய்வில் தகவல்

பெண்கள் நைட் ஷிப் வேலைக்கு சென்றால் கேன்சர் வருமா?-  ஆய்வில் தகவல்

நைட் ஷிப் பணிபுரியும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என வெளிவந்த தகவலில் உண்மையில்லை என தற்போது வெளிவந்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. 

நைட் ஷிப் பணிபுரியும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என வெளிவந்த தகவலில் உண்மையில்லை என தற்போது வெளிவந்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. 

நைட் ஷிப் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் தெரியவந்தன.இந்நிலையில் தற்போது லண்டனில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இரவு நேரப் பணிக்கும், மார்பக புற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 10 ஆண்டுகளாக இரவு பணிக்கு செல்லும் ஒரு லட்சத்து 2  ஆயிரம் பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இரவு நேரப் பணியால் பெண்களுக்கு வேறு சில பாதிப்புகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.