பெண்கள் தான் எப்போவுமே அடங்கி போகணுமா? தப்பாட் படத்தின் ட்ரைலரை பார்த்து கொந்தளித்த மத்திய அமைச்சர்

பெண்கள் தான் எப்போவுமே அடங்கி போகணுமா? தப்பாட் படத்தின் ட்ரைலரை பார்த்து கொந்தளித்த மத்திய அமைச்சர்

டாப்ஸி பன்னு  நடித்து வெளிவரவிருக்கும் புதிய படம்  ‘தப்பாட்’. இந்த படத்தின் முதல் ட்ரைலர் வெளிவந்த  போது பெரும்சலசலப்பு ஏற்பட்டது. சமூகத்தில் இன்றும் ஆணாதிக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை பதிவு செய்யும் விதத்தில் ட்ரைலர் இருந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகியது. இதைத்தொடர்ந்து டாப்ஸி பல பேட்டிகளை அளித்து வருகிறார்.

thappad-movie

இந்த படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லரைப் பார்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கருத்தை தெரிவித்துள்ளார். தப்பாட் படத்தின் ட்ரெய்லரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த பதிவில் “உங்களில் எத்தனை பேர் பெண்கள் மட்டும்தான் பொறுத்து போகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்”. ஏழைக்குடும்பத்து பெண்கள் மட்டும்தான் தாக்கப்படுகிறார்கள் என்று இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா?” என்று பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எழுதிய அவர், “படித்தவர்கள் தங்களின் கைகளை ஓங்க மாட்டர்கள் என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்? எங்களுக்கும் இந்த கொடுமை நடந்ததுள்ளது, பெண்கள் தான் பொறுத்துப் போகவேண்டும் என்று எத்தனை பெண்கள் தங்கள் மகள் மற்றும் மருமகளிடம் கூறியுள்ளார்கள்? என்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து கொந்தளித்தார்.

பின்பு “இயக்குனரின் அரசியல் கருத்துக்களை நான் ஆதரிப்பதில்லை. அதே போல் சில நடிகர்களின் போக்கு  பல விஷயங்களில் எனக்கு பிடிப்பதில்லை. இருந்தாலும் இந்த படத்தை கண்டிப்பாக பார்ப்பேன். இந்த படத்தை உங்கள் குடும்பத்தினருடன் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். எந்தப் பெண்ணையும் அடிப்பது சரியல்ல. ஒரு ‘அடி’ கூட, ஒரு அடி மட்டுமல்ல” என்று எழுதியுள்ளார். ‘ஸ்மிருதியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இந்த படத்தில், குடும்ப வாழ்க்கையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.