பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் பார்த்தால் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் – செல்லூர் ராஜூ 

பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் பார்த்தால் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் – செல்லூர் ராஜூ 

பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

sellur raju

மதுரையில் அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு நல உதவிகள் வழங்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மீனாட்சி கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,  “பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உந்துசக்தியாக செயல்பட்டவர், பெண்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயலலிதா. பெண்கள் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை வழங்கினார். பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும். வயிற்றிலிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் அரசியல்வாதிகளாகவோ, பிரதம மந்திரியாகவோகூட ஆகலாம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பிரசவ கால குழந்தை இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.