பெண்கள் குறித்து ஆபாச பேச்சு: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடை

 

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடை

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.

மும்பை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய அவர்கள், பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இவர்களின் இந்த கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு மட்டுமின்றி, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருவருக்கும் தடை விதித்துள்ள பிசிசிஐ, இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதேபோல், ஆஸ்திரேலியாவில் நாளை நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டிக்கு அவர்களை தேர்வு செய்ய வேண்டாம் என அணி நிர்வாகத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.