பெண்கள் குறித்து அவதூறு பேச்சு : பாக்யராஜ் மீது மகளிர் ஆணையம் புகார் !

 

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு : பாக்யராஜ் மீது மகளிர் ஆணையம் புகார் !

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் அந்த இளைஞர்கள் மட்டும் தவறு செய்யவில்லை, அதில் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் தவறு இருக்கிறது என்று தெரிவித்தார். 

ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருத்துக்களைப் பதிவுசெய்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாக்யராஜ், பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில ஆண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் அந்த இளைஞர்கள் மட்டும் தவறு செய்யவில்லை, அதில் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் தவறு இருக்கிறது என்று தெரிவித்தார். 

bakyaraj

பொள்ளாச்சி வன்கொடுமைக்குத் தமிழகமே எதிர்ப்பு தெரிவித்து வருகையில், இயக்குநர் பாக்யராஜ் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாக்யராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆந்திர மகளிர் ஆணையம் தமிழக மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. 

ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வாசிரெட்டி பத்மா தமிழக மகளிர் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒரு சில சம்பவங்களை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த மகளிரையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியதால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.