பெண்கள் எப்படி விரதம் இருக்க முடியும்.. விதிகளை மாற்றுங்கள்! – கஸ்தூரி கோரிக்கை

 

பெண்கள் எப்படி விரதம் இருக்க முடியும்.. விதிகளை மாற்றுங்கள்! – கஸ்தூரி கோரிக்கை

சபரிமலை வழிபடுதல் முறைகளில் புதிய நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: சபரிமலை வழிபடுதல் முறைகளில் புதிய நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை வரவேற்றுள்ள நடிகை கஸ்தூரி, அந்தக் கோயிலுக்கு செல்லப் பெண்களால் 48 நாட்கள் விரதம் இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் நாட்களில் மலையேறும் போது ரத்த வாடைக்கு வன விலங்குகள் வரக் கூடும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

ஆகவே, பெண்கள் எத்தனை நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு வர வேண்டும் என்று புதிய விதி உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், சபரிமலை வரும் பெண்கள் அணிய வேண்டிய ஆடை குறித்தும் வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கஸ்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.