பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை வைத்த நபர் கைது!

 

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை வைத்த நபர் கைது!

கனடாவில் பெண்கள் உடை மாற்றும் அறைகளில் கேமராக்களை மறைத்து வைத்து பல பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டார். 

கனடாவில் பெண்கள் உடை மாற்றும் அறைகளில் கேமராக்களை மறைத்து வைத்து பல பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டார். 

டொராண்டோவில் 22 வயது ஆண் ஒருவர் பிரபல மால் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஆண் பெண் இருவருக்கும் பொதுவான உடை மாற்றும் அறை ஒன்றில் வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் சிறு கருவி ஒன்றை மறைத்து வைத்து விட்டு வந்துள்ளார். அங்கு உடை மாற்ற வந்த ஒரு பெண் அந்த கருவியைப் பார்த்து சந்தேகமடைந்து போலீசாரையும் கடையின் பாதுகாவலர்களையும் அழைத்துள்ளார். உடனடியாக அங்கு வந்து அந்த கருவியை சோதித்த போது அதில் பல பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருப்பதைக் கண்டுள்ளனர். அந்த நபரைக் கைது செய்துள்ள போலீசார், அவர் மீது பெண்களுக்கு தெரியாமல் உடை மாற்றுவதை வீடியோ எடுத்ததாக 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளதோடு, சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் பதிவு செய்துள்ளனர்