பெண்களை மரியாதையாக நடத்துவது தென்னிந்தியர்கள் தான் : பெண்கள் மத்தியில் ராகுல் பேச்சு!

 

பெண்களை மரியாதையாக  நடத்துவது தென்னிந்தியர்கள் தான் : பெண்கள் மத்தியில் ராகுல் பேச்சு!

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் உரையாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

சென்னை: சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் உரையாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, தமிழகம் வந்துள்ளார். விமானம் மூலம்  டெல்லியிலிருந்து சென்னை வந்துள்ள அவர்  சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் உரையாடுகிறார்.

முதலில் மாணவிகள் கேள்விகளை எழுப்ப முற்பட்ட போது  தன்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்று ராகுல் கோரிக்கை விடுத்தார். பின்பு மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு:-

கல்விக்கு குறைந்த செலவு: 

‘கல்விக்காகக் குறைந்த அளவே அரசு செலவு செய்து வருகிறது. கல்வி தனியார் மயமாக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. 

பாதுகாப்பு:

பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குகிறதுஉத்தரப்பிரதேசத்தில் தான் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். தேசிய அரசியல் அரசு பணிகளில் பெண்கள் அதிகளவில் உள்ளனர்.

பொருளாதார வீழ்ச்சி 

பணமதிப்பிழப்பால்  பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமா ?பொருளாதாரத்தை மேம்படுத்த  அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்திய மக்களின் கோடிக்கணக்கான பணத்தை தொழிலதிபர்கள் கொள்ளையடிக்கிறார்கள். நீரவ் மோடி ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பித்து விட்டார்கள். அப்போது  நீரவ் மோடிக்கு பதில்  நரேந்திர மோடி என்று ராகுல் கூறியதால், மாணவிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். குற்றச்சாட்டுகள் யார் மீது இருந்தாலும் அதை விசாரிக்க வேண்டும்.

தற்சமயம் இந்தியாவில் இரு கொள்கைகளுக்கு இடையே யுத்தம் நடைபெறுகிறது. அதில், ஒன்று, மக்களை ஒன்றிணைக்கும் கொள்கை. நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும், எந்தவொரு கொள்கையும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்ற கொள்கை. மற்றொரு கொள்கை, தற்போதைய பாஜக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் வழிநடத்தப்படுவது. நாட்டின் பல்வேறு மதம், மொழிகளைக் கைவிட்டு, ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் மக்களைப் பிரித்தாள்வது. அதற்கு எதிராக நாம் போராடுகிறோம். மோடி ஆட்சியில் உச்ச நீதிமன்றம், சிபிஐ என தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப்பட்டு விட்டன. மொழி , மதம், இனத்தால் நாம் வேறுபட்டாலும், நாம்  அனைவரும் ஒன்று தான்’ என்று கூறினார்.

இதையடுத்து சோனியா காந்தி குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘எனது தாயார் சோனியாவிடம் அன்பை கற்று கொண்டேன். பிறர் மீது அன்பு செலுத்த அவர் சொல்லி கொடுத்துள்ளார். அவரிடம் திறன் என்னிடம் உள்ளது’ என்றார்.