பெண்களைப் போகப்பொருளாக மட்டுமே நடத்திய திருவிதாங்கூர் மன்னர்கள்! கருப்பு பக்கங்கள் விரைவில் வெள்ளித்திரையில்!

 

பெண்களைப் போகப்பொருளாக மட்டுமே நடத்திய திருவிதாங்கூர் மன்னர்கள்! கருப்பு பக்கங்கள் விரைவில் வெள்ளித்திரையில்!

யுவபுரஷ்கார் விருது பெற்ற  “தி ஐவரி த்ரோன்ஸ் – க்ரோனிக்கல்ஸ் ஆப் தி ஹவுஸ் ஆப் திருவாங்கூர்” என்ற நாவலைத் திரைப்படமாக்கும் உரிமையை பாகுபலி திரைப்படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

யுவபுரஷ்கார் விருது பெற்ற  “தி ஐவரி த்ரோன்ஸ் – க்ரோனிக்கல்ஸ் ஆப் தி ஹவுஸ் ஆப் திருவாங்கூர்” என்ற நாவலைத் திரைப்படமாக்கும் உரிமையை பாகுபலி திரைப்படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

ivory thrones

திருவாங்கூர் சமஸ்தானம் 

கடந்த 2015 – ஆம் ஆண்டு மனு எஸ்.பிள்ளை எழுதிய புத்தகம் தான் “தி ஐவரி த்ரோன்ஸ் – க்ரோனிக்கல்ஸ் ஆப் தி ஹவுஸ் ஆப் திருவாங்கூர்” இப்புத்தகத்தை ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டது. இந்த புத்தகம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி ராணி சேது லட்சுமி பாய் மற்றும் ஓவியர் ரவி வர்மா மற்றும் அவரது  மனைவியின் வாழ்க்கை வரலாற்றைப் பேசுவதாகும்.

the ivory throne

கேரளா சமஸ்தானங்கள் அடக்குமுறைகளுக்கு பிரசித்தி பெற்றவை. ஜாதிய ரீதியான அடக்குமுறைகள், பெண்கள் மீதான வன்முறைகள் என கேரளா சமஸ்தானத்தில் நடந்த நிகழ்வுகள் சரித்திரத்தின் கருப்புப் பக்கங்கள். இந்த விதத்தில் தான் தி ஐவரி த்ரோன்ஸ் புத்தகம் கவனம் ஈர்த்தது. ஆங்கிலேய வருகைக்கு பின்னரான திருவாங்கூர் சமஸ்தானம், மனைவியை மாற்றும் நீதிமன்றங்கள், ஒழுக்கமற்ற மற்றும் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்திய மன்னர்கள் என இப்புத்தகம் விரிகிறது. 

ivory of thrones

பிரம்மாண்ட முயற்சி 

“இப்படி ஒரு வரலாற்றை இது வரையில் யாரும் திரைப்படமாக எடுத்திருக்க மாட்டார்கள். திரையில் பார்த்திருக்க மாட்டார்கள்.” என்று உறுதியாகக் கூறுகிறார் பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோபு யார்லங்ட்டா. மேலும், 1729 – ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1949 வரை செயல்பட்ட திருவாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றை, கலாச்சாரங்கள் மற்றும் பண்பாட்டை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் அறியச்செய்யவே அதை திரைப்படமாக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

bahubali

மிகப்பெரும் பட்ஜெட்டில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களைத் தயாரித்து, அது உலகம் முழுவதும் 2400 கோடி வசூலைக் குவிக்க, அந்த வெற்றி தந்த தைரியத்தில் தொடர்ந்து திருவாங்கூர் ராணியின் வரலாற்றை படமாக்க இருக்கிறார் போலும் தயாரிப்பாளர்.