பெண்களுக்கு தனிவரிசை இல்லை: தேவஸம்போர்டு புதிய விதிமுறைகள் அறிவிப்பு

 

பெண்களுக்கு தனிவரிசை இல்லை: தேவஸம்போர்டு புதிய விதிமுறைகள் அறிவிப்பு

சபரிமலை வரும் பெண்களுக்கு தனி வரிசை இல்லை என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகளை கேரள தேவஸம்போர்டு அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்: சபரிமலை வரும் பெண்களுக்கு தனி வரிசை இல்லை என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகளை கேரள தேவஸம்போர்டு அறிவித்துள்ளது.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும் மதத் தலைவர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் கேரள தேவஸம்போர்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை வரும் பெண்களுக்கு புதிய விதிமுறைகளை கேரள தேவஸம்போர்டு அறிவித்துள்ளது. அதன்படி, சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு தனி வரிசை கிடையாது. நிலக்கல்- பம்பை அருகே பெண்களுக்காக 25 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும். பெண்கள் அனுமதிக்கப்படுவதால் சன்னிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்க கூடாது. நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதற்கேற்ப உடல் வாகு உள்ள பெண்கள் மட்டும் வர வேண்டும் என கூறியுள்ளது.