பெண்களுக்கான சம்மர் ஸ்பெஷல் காஸ்டியூம்ஸ்!

 

பெண்களுக்கான சம்மர் ஸ்பெஷல் காஸ்டியூம்ஸ்!

சென்னை: கொளுத்தும் வெயிலை சமாளிக்க எந்த மாதிரியான உடைகளை பயன்படுத்துவது என்பது குறித்து ஃபேஷன் டிசனர்ஸ் சில டிப்ஸ்களை அளித்துள்ளனர்.

பொதுவாகவே பெண்கள் ஒரே மாதிரியான ஆடைகளை பயன்படுத்துவது வழக்கம். அது அவர்களுக்கு விருப்பமான ஆடையாகக் கூட இருக்கலாம், ஆனால், அதே ஆடைகளை சம்மரிலும் பயன்படுத்த முடியாது என்பது தான் நிதர்சனம்.

shoping

சம்மர் காலத்தில் சரும பிரச்னைகள் அதிகம் ஏற்படும் என்பதால், சில காட்டன் ஆடைகளை பயன்படுத்துவது நல்லது. இறுக்கமான உடைகளைத் தவிர்த்து லாங் ஸ்கர்ட், மேக்ஸி, தரமான லெக்கிங்ஸ், பலாசோ வகையிலான அகலமான பேன்ட் மாடல்களில், காட்டன், ரேயான் காட்டன் வகை உடைகளைப் பயன்படுத்தலாம்.

டூவீலரில் பயணிக்கும் பெண்கள் தலைக்கு வெறும் ஹெல்மெட் பயன்படுத்தாமல் காற்றோட்டமுடைய ஃபேஸ்  மாஸ்க் அல்லது சுத்தமான காட்டன் துணிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் முடி உதிர்வு, பொடுகு பிரச்னைகளை தவிர்க்கலாம். 

shoping special

மேலாடைகளை விட உள்ளாடைகள் தரமானதாக இறுக்கமாக இல்லாமல் லேசாக அணிந்துக் கொள்ளலாம். ஷேப்பர், மினிமைஸர், பேடட் பிரா, பாக்ஸர்களை தவிர்ப்பது நல்லது.

குடை, கூலர், தொப்பி, ஸ்கார்ஃப்  என வெயிலுக்கு பாதுகாப்பான ஆக்ஸசரிஸ்களை பயன்படுத்துவது நல்லது. காட்டன் துப்பட்டாக்களை கையில் வைத்திருப்பது நல்லது என முன்னணி ஃபேஷன் டிசைனர்கள் டிப்ஸ் அளித்துள்ளனர்.