பெட்ரோல் பங்க் குளறுபடியால் நடுரோட்டில் பழுதான நின்ற வாகனங்கள்! மக்களே உஷார்!

பெட்ரோல் பங்க் குளறுபடியால் நடுரோட்டில் பழுதான நின்ற வாகனங்கள்! மக்களே உஷார்!

நாட்டில் தங்கத்திற்கு அடுத்தபடியாக தினந்தோறும் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது பெட்ரோல், டீசல் விலை தான். விலையேறும் போது ஐந்து, பத்து ரூபாய் என எகிறியடிக்கும் பெட்ரோல் விலை குறையும் போது செல்லாத பத்து பைசா, இருபது பைசா கணக்குகளில் குறைந்து வாகனம் ஓட்டுபவர்களின் பொருளாதாரத்தைப் பார்த்து சிரிக்கும்.

petrol

ஏற்கெனவே என்ன தான் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு மீட்டரைப் பார்த்து பெட்ரோல் போட்டாலும், பாதி காற்றும், மீதி பெட்ரோலுமாய் தான் பல பெட்ரோல் பங்க்குகளில் போடுகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல் சோதனையாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்ட வாகனங்கள் அனைத்துமே அடுத்த 200, 300 மீட்டர்கள் செல்வதற்குள் பழுதாகி நடுவழியில் நின்று போனது. இப்படி ஒன்றிரண்டு வாகனங்கள் கிடையாது.. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பெட்ரோல் போட்ட அடுத்த அஞ்சு நிமிஷத்துல நடுவழியில மக்கர் பண்ண ஆரம்பித்தது. மார்த்தாண்டத்தில் நேசமணி கிறித்தவ கல்லூரி எதிரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் தான் இந்த நிலைமை.  இத்தனைக்கும் 50 வருஷங்களுக்கும் மேலாக இயங்கி வரும் பெட்ரோல் பங்க் இது.

petrol

வாகனங்கள் இப்படி நடுவழியிலேயே நின்று போனதையடுத்து அனைவரும் பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாகனங்களில் இருந்து பெட்ரோலை எடுத்து சோதனையிட்ட போது, பெட்ரோலுடன் வெண்மை நிறத்தில் திரவம் கலந்திருந்தது தெரிய வந்தது.  இதுகுறித்து பங்க்கின் உரிமையாளர் பிரின்ஸ் கூறுகையில், அண்மைக்காலமாக பெட்ரோலில் 10 விழுக்காடு அளவுக்கு எத்தனால் கலக்கப்படுவதாகவும் அந்த எத்தனாலுடன் தவறுதலாக தண்ணீர் கலந்து விட்டதாகவும் கூறினார். பாதிப்புக்குள்ளான வாகனங்களை பழுது நீக்குவதற்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக அவர் கூறியதை அடுத்து வாகன ஓட்டிகள் சமாதானம் அடைந்தனர்.