பெட்ரோல் பங்கில் பெண் செய்த காரியம்: வைரலாகும் வீடியோ!

 

பெட்ரோல் பங்கில் பெண் செய்த காரியம்: வைரலாகும் வீடியோ!

கலிபோர்னியா: அமெரிக்காவில்,  பெண் ஒருவர் எலக்ட்ரிக் கார் ஒன்றுக்கு பெட்ரோல் போட முயற்சித்த வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பெட்ரோல்- டீசல் என வண்டிகளில் நிரப்பிக்கொண்டு சூழலும் புகை மண்டலத்தையும் மாசு மண்டலத்தையும் உருவாக்க விரும்பாத மேற்கத்திய நாடுகளில், மெதுமெதுவாக எலக்ட்ரிக் கார்களில் தொடங்கி, ஆளே இல்லாத தானியங்கி கார்கள் வரை களமிறக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் டெஸ்லா என்கிற புதிய வகை எலக்ட்ரிக் காரை பெட்ரோல் பங்குக்கு எடுத்துச் சென்று, மின்சாரத்திற்கு பதில் பெட்ரோலை பாய்ச்ச முயற்சித்திருக்கிறார் ஒரு பெண். பெட்ரோல் பம்பினை எடுத்து, தான் ஓட்டிவந்திருந்த எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் போடும் இடத்தைத் தேடியுள்ளார். ஆனால் காரின் ஓரிடத்தில் சார்ஜிங் போர்டு என்று இருந்ததை பார்த்தும் கூட அந்த பெண் யோசிக்காமல் பெட்ரோல் போடும் இடத்தை தொடர்ந்து தேடியபடி உள்ளார்.

அந்த பெண்ணின் செய்கைகளை  அடுத்தடுத்து பின்னால் வந்து நின்ற கார் காரர்கள் அமைதியாக நின்று  வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவிவருகிறது.