பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி : கடனுக்கு டீசல் வழங்கும் திட்டம்!

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி : கடனுக்கு டீசல் வழங்கும் திட்டம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து டீசலுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர்: பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து டீசலுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை எட்டி வரும் விலையில் தங்கத்தை கூட வாங்கிடலாம் ஆனால் பெட்ரோலை வாங்க முடியாது போல என்கிற பொது மக்களின் புலம்பல்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.   

இந்நிலையில் தனியார் பெட்ரோல் நிறுவனம் ஒன்று டீசல் வாங்கக் கடன் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது, ஸ்மைலேஜ் எனும் திட்டத்தின்மூலம் டீசலுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிமுகமாகி உள்ளது.  இத்திட்டத்தின் மூலமாக 100 ரூபாய்க்கு டீசல் போடுபவர்களிடம், மாதம் ரூபாய் 1.50 தொகை வட்டியாக வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், டீசல் போட்டதற்கான பணத்தை விரைவாக திருப்பிச் செலுத்தும்போது, நாள்கள் அடிப்படையிலான வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கும், அடிக்கடி காரில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கும் இந்த டீசல் கடன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இருசக்கர வாகனங்கள் வாங்கவும், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கவும் தான் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால், டீசல் வாங்கவும் கடன் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.