பெட்ரோல், டீசல் விலை உயர்வு: செப்.,10-ல் முழு அடைப்பு போராட்டம்

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: செப்.,10-ல் முழு அடைப்பு போராட்டம்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக செப்டம்பர் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக செப்டம்பர் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பெட்ரோல் விற்பனை மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். போராட்டத்திற்கு சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார்.