பெட்ரோல் டீசல் கார்களுக்கு தடையா? நிதின் கட்கரி விளக்கம்!

 

பெட்ரோல் டீசல் கார்களுக்கு தடையா? நிதின் கட்கரி விளக்கம்!

‘பெட்ரோல் டீசல் வாகனங்களை இந்தியாவில் தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை’ என கட்கரி ஆணித்தரமாக விளக்கிவிட்டார். பாதாளத்தில் வீழ்ந்துகிடக்கும் கார் விற்பனைக்கு, மத்திய அரசு எலெக்ட்ரிக் கார்களை ஊக்குப்படுத்துவதும் ஒரு காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், நிதின் கட்கரியின் அறிவிப்பு, கார்கள் விற்பனையை அதிகரிக்குமா?

அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த, பொருளாதாரத்தை மேம்படுத்த, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த, சுற்றுச்சூழலை காக்க என பல மாங்காய்களை ஒரேகல்லில் வீழ்த்தும் யோசனைதான் பெட்ரோல் டீசல் வாகனங்களை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்பதும். மத்திய அமைச்சகத்துக்கும் இது தொடர்பான யோசனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் இறுதி முடிவை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

No ban on petrol diesel vehicles for now

அதன்படியே, மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மத்திய அரசின் நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக. ஆம், ’பெட்ரோல் டீசல் வாகனங்களை இந்தியாவில் தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை’ என கட்கரி ஆணித்தரமாக விளக்கிவிட்டார். பாதாளத்தில் வீழ்ந்துகிடக்கும் கார் விற்பனைக்கு, மத்திய அரசு எலெக்ட்ரிக் கார்களை ஊக்குப்படுத்துவதும் ஒரு காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், நிதின் கட்கரியின் அறிவிப்பு, கார்கள் விற்பனையை அதிகரிக்குமா? அடுத்த காலாண்டு வரை காத்திருப்போம்!