பெட்ரோல், டீசல் இல்லாமல் புது என்ஜீன்! சாதனை ஆராய்ச்சியாளருக்கு கொலை மிரட்டல்!  தமிழக அரசின் அலட்சியம்!

 

பெட்ரோல், டீசல் இல்லாமல் புது என்ஜீன்! சாதனை ஆராய்ச்சியாளருக்கு கொலை மிரட்டல்!  தமிழக அரசின் அலட்சியம்!

தமிழகத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் தான் சுறுசுறுப்பாக இயங்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அரசு அதிகாரிகளும், தமிழக அரசும் முக்கியமான விஷயங்களிலும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் போன்றவைகளைப் பயன்படுத்தாமல், ஹைட்ரஜனைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்க செய்யுமாறு புதிய மோட்டார் என்ஜீனை கண்டுபிடித்திருக்கிறார் தமிழகத்தின், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளந்தரராஜன் குமாரசாமி.

தமிழகத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் தான் சுறுசுறுப்பாக இயங்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அரசு அதிகாரிகளும், தமிழக அரசும் முக்கியமான விஷயங்களிலும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் போன்றவைகளைப் பயன்படுத்தாமல், ஹைட்ரஜனைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்க செய்யுமாறு புதிய மோட்டார் என்ஜீனை கண்டுபிடித்திருக்கிறார் தமிழகத்தின், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளந்தரராஜன் குமாரசாமி. இவரது புதிய கண்டுப்பிடிப்பிற்கு இந்திய அரசும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அவருக்கு தான், தனது ஆராய்ச்சிகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு கொலை மிரட்டல் வந்திருக்கிறது.

petrol

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சௌந்தரராஜன் குமாரசாமி. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை இயக்குவதற்கும், தங்கத்தைப் போன்று நாளுக்கு நாள் எகிறி வரும் பெட்ரோல், டீசல் விலைகளை மனதில் வைத்தும், இவற்றிற்கு மாற்றாக, ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயங்கச் செய்வதற்கான முயற்சியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்திருந்தார். இவரது ஆராய்ச்சியின் மைல்கல்லாக, அதில் வெற்றியும் பெற்று, புதிதாக, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாமல், பெட்ரோல், டீசல் பயன்படுத்தாமல், சூப்பர்சோனிக் ஹைட்ரஜன் என்ஜீன் எனப்படும் வாகன என்ஜீனை  கண்டுபிடித்துள்ளார்.  செளந்தரராஜனின் இந்த கண்டுபிடிப்புக்கு இந்திய அரசு அங்கிகாரமும் கொடுத்திருக்கிறது. 
தனது புதிய கண்டுப்பிடிப்புக்கு அங்கிகாரம் கிடைத்ததை அடுத்து அந்த புது என்ஜீனை சந்தைப்படுத்தி, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தார் செளந்தரராஜன். அப்போது, ஜப்பான் நாட்டில் அவரது புதிய கண்டுபிடிப்புக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இன்ஜினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அலுவலகப் பணிகள் ஜப்பான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

complaint

இந்நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பை எந்த நாட்டிலுமே தொடரக் கூடாது என்றும், மீறியும் இந்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் கொலை செய்யப்படுவீர்கள் என்றும் ஆராய்ச்சியாளர் செளந்தரராஜன் வீட்டிற்கு கடந்த 14ம் தேதி கடிதம் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளரிடம் ஆராய்ச்சியாளர் சௌந்தரராஜன் குமாரசாமி புகார் மனு அளித்துள்ளார். ஏற்கெனவே கடந்த 2009ம் ஆண்டு லஷ்கர்-இ- தைபா அமைப்பின் பெயரில் இது போன்று தனக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பெருமையையும் தேடித் தரும் வகையில் புதிய என்ஜீனைக் கண்டுப்பிடித்திருக்கும் ஆராய்ச்சியாளரைக் கண்டுக் கொள்ளாமல், அவருக்கு கொலை மிரட்டல் வந்திருந்தும் அலட்சியப்படுத்தும் தமிழக அரசின் மெத்தனப்போக்கை சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.