பெட்டிக்குள் நண்பனை அடைச்சு வீட்டுக்குள் இழுத்து போன கொடுமை – கொரானா நேரத்துல கூத்தடிக்க போட்ட பிளான்

பெட்டிக்குள் நண்பனை அடைச்சு வீட்டுக்குள் இழுத்து போன கொடுமை – கொரானா நேரத்துல கூத்தடிக்க போட்ட பிளான்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பார்வையாளர்கள் நுழையக்கூடாதென சில குடியிருப்பு சங்கங்கள் கூறியுள்ள நிலையில், ஒரு 17 வயது சிறுவன் தனது  நண்பனை ஒரு பெட்டிக்குள் பதுக்கி குடியிருப்புக்குள் கூட்டிப்போனதால் மாட்டிக்கொண்டான்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மங்களூருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் நடந்தது. அந்த டீனேஜ் சிறுவன் தனது நண்பனோடு அன்று அதிகாலை 2 மணியளவில் அபார்ட்மெண்ட் வாசல் வரை பைக்கில் வந்தான் .பிறகு அந்த சிறுவன் தன்னுடைய நண்பனை தான் கொண்டு வந்த பெட்டிக்குள் அடைத்தான். பிறகு அந்த பெட்டியோடு அவன் அபார்ட்மெண்டுக்குள் நுழைய முயன்ற போது ,அங்கிருந்த வாட்ச்மேன் ,பெட்டியின் அளவையும் ,அதற்குள் அசைவையும் கவனித்து சந்தேகப்பட்டு ,அபார்ட்மெண்ட் நிர்வாகிகளிடம் தெரிவித்தார் .
பிறகு அபார்ட்மெண்ட் நிர்வாகிகள் வந்து மறுநாள் அவர் வீட்டை சோதனையிட்டபோது வீட்டிற்குள்ளிருந்து ஒரு புதிய வாலிபன் வருவதை கண்டு விசாரித்த போது ,அந்த டீனேஜ் பையனின் விளையாட்டுக்கள் வெளிச்சத்துக்கு வந்தது .இந்த விவகாரம் பற்றி அவர்கள் போலீசில் புகாரளித்தனர்.