பெங்களூர் காய்கறி கடைகளின் லேட்டஸ்ட் ட்ரண்ட் என்ன தெரியுமா?

 

பெங்களூர் காய்கறி கடைகளின் லேட்டஸ்ட் ட்ரண்ட் என்ன தெரியுமா?

சாதாரணமாக முருங்கை கிலோ 100 ரூபாயை தாண்டினாலே பெரிய விசயம்.ஆனால் கடந்த பத்து நாட்களில் அது மின்னல் வேகத்தில் முன்னேறி குவிண்ட்டால் 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

முதலில் வெங்காயம் விலை எகிறியது.எழுபது , எண்பது  என்று படிப்படியாக ஏறி 200 ஐ தொட்டது.பத்திரிகைகளில் வெங்காய  காமெடிகள் வரிசை கட்டின.மக்கள்தான் சிரிக்க முடியாமல் கண்கலங்கினார்கள்,வெங்காயத்தை உரிக்காமலே.

ttn

அப்புறம் மந்திரிகள் மனது வைத்து ஈஜிபுத்து வெங்காயம் , இஸ்ரேல் வெங்காயத்தை எல்லாம் இறக்குமதி செய்து வரவழைத்து விலையை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.இந்தியா முழுவதுமே இதுதான் நிலவரம்.

மார்கழி பிறந்து விட்டதால் இனி தைமாத கடைசிவரை இந்துக்களுக்கு பண்டிகைகள் களைகட்டும்.அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டெல்லாம் வருவதால் பிரியாணிக்கு வெங்காயம் நிறையத் தேவைப்படுமே என்று எல்லோரும் சிந்தித்துக்கொண்டு இருக்க,எதிர்பாராத தாக்குதல் தொடுத்திருக்கிறது முருங்கைக்காய்.

ttn

சாதாரணமாக முருங்கை கிலோ 100 ரூபாயை தாண்டினாலே பெரிய விசயம்.ஆனால் கடந்த பத்து நாட்களில் அது மின்னல் வேகத்தில் முன்னேறி குவிண்ட்டால் 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் கிலோ 500 ரூபாய்.இந்தியாவெங்கும் வியாபாரிகள் தினறிக்கொண்டு இருக்க பெங்களூரு காய்கறிக் கடைக்காரர்கள் ஒரு எளிமையான புதிய வியாபார யுக்தியை களமிறக்கி இருக்கிறார்கள்.

ttn

சாதாரணமாக தீபாவளி சீசனில் செருப்பு முதல் சேலை வரை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று விற்கிற அதே ஐடியாதான்.ஆனால்,ஒரு சின்ன சேஞ்ச்! ஒரு முருங்கைக்காய் 40 ரூபாய்.அதை வாங்குபவருக்கு ஒரு வெங்காயம் முற்றிலும் இலவசம் அதே போல ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு முழு முருங்கைக்காய் ஃப்ரீ..ஃப்ரீ..ஃப்ரீ!