பெங்களூர் அணிக்கு புதிய சோதனை; வேதனையில் ரசிகர்கள் !!

பெங்களூர் அணிக்கு புதிய சோதனை; வேதனையில் ரசிகர்கள் !!

ஸ்டைனிற்கு காயம் ஏற்பட்டுள்ளது பெங்களூர் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணியின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வேதனையை வேறு வழியே இல்லாமல் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

ஐ.பி.எல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. bangalore

இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து பல படுதோல்விகளை சந்தித்து வந்த பெங்களூர் அணி, கடந்த இரண்டு போட்டியில் வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு திரும்பியதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் டேல் ஸ்டைன். 
எங்க தலைவன் ஸ்டைன் வந்துட்டான்., இனி பெங்களூர் அணியை அசைத்து கூட பார்க்க முடியாது, அடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையையும் நாங்களே வெல்வோம் என்ற அளவிற்கு சமூக வலைதளங்களில் பெங்களூர் அணிக்கு ஓவர் டைமாக வேலை பார்த்து வந்த பெங்களூர் ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக டேல் ஸ்டைனிற்கு காயம் ஏற்பட்டு அவர் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

bangalore