பெங்களூரு சாலைகளை சரிவர பராமரிக்காத பொறியாளர்களுக்கு அபராதம்!

 

பெங்களூரு சாலைகளை சரிவர பராமரிக்காத பொறியாளர்களுக்கு அபராதம்!

முறையாக சாலையை பராமரிக்காத சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இன்சினியருக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது. ஒவ்வொரு பள்ளத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமாக உதவி பொறியாளர்களுக்கும், செயல் பொறியாளர்களுக்கும் விதிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லா பெரிய மாநகரங்களையும் கணக்கில்கொண்டால், பெங்களூருவில் பெய்யும் வருடாந்திர சராசரி மழையளவு கூடுதலாகவே இருக்கும். அடிக்கடி பெய்யும் மழைக்கு ஏற்றவாறுதானே பெங்களூரு சாலைகளும் அமைக்கப்படவேண்டும்? பராமரிக்கப்படவேண்டும்? அவ்வாறு செய்யாமல் விட்டதன்விளைவாக, சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றியுள்ளன. சில இட்லி சைசுக்கும், சில தோசை சைசுக்குமாக பள்ளங்கள் இருப்பதால், வண்டியோட்டிகள் படும் அவதி சொல்லிமாளாது. ஏற்கெனவே பெங்களூரு சாலைகளின் வண்டிகளால் போக்குவரத்து விழிபிதுங்கும்போது, சாலைகளும் மோசமாக இருந்தால் என்னதான் செய்யமுடியும்?

Bengaluru Roads poor condition

எனவே, முறையாக சாலைகளை பராமரிக்காத அரசு இன்சினியர்களுக்கு அபராதம் விதிக்க பெங்ளூரு மாநகர நிர்வாக கமிட்டி முடிவு செய்துள்ளது. முறையாக சாலையை பராமரிக்காத சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இன்சினியருக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது. ஒவ்வொரு பள்ளத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமாக உதவி பொறியாளர்களுக்கும், செயல் பொறியாளர்களுக்கும் விதிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலை பள்ளங்களை சரிசெய்ய உடனடியாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.