பெங்களூருவில் கனமழை; 3 பேர் பலி!

 

பெங்களூருவில் கனமழை; 3 பேர் பலி!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு கோடை காலங்களில் கூட மற்ற நகரங்களை குளுகுளுவென இருக்கும். ஆனால், நடப்பாண்டு கோடைகாலத்தில் பெங்களூருவில் அதிகளவு வெயில் அடித்தது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றில் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு கோடை காலங்களில் கூட மற்ற நகரங்களை குளுகுளுவென இருக்கும். ஆனால், நடப்பாண்டு கோடைகாலத்தில் பெங்களூருவில் அதிகளவு வெயில் அடித்தது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதால், பொது மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

bengaluru rain

இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல் வெயில் அதிகமாக இருந்து வந்த போது, திடீரென மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கடுமையான மழை பெய்தது. மலையுடன் சேர்ந்து பலத்த காற்றும் வீசியதால், மரங்கள் வேரோடு சாய்ந்தன. அந்த வகையில், லும்பினிகார்டன் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிரண் எனும் 27 வயதான இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். டோடபாலபூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

bengaluru rain

பெங்களூரு மட்டுமில்லாமல் கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த இரு நாட்களுக்கு கர்நாடகாவில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, குஜராத், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் பருவம் இல்லாத காலத்தில் பெய்த திடீர் மழை மற்றும் புயல் காற்றில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

மழையை அரசியலாக்காதீர்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்!