பெங்களூருவிலும் தடை உத்தரவு! சி.ஏ.பி-க்கு ஆதரவு பெருகுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை

பெங்களூருவிலும் தடை உத்தரவு! சி.ஏ.பி-க்கு ஆதரவு பெருகுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 நள்ளிரவு வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

144

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு, டெல்லி, மேற்கு வங்கம், தமிழகம் என நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் இணைய சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஆளும் பா.ஜ.க அரசு பெங்களூருவில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் 21ம் தேதி நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

cab

இது குறித்து பெங்களூரூ கமிஷனர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. அவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது அனுமதி ரத்து செய்யப்படுகிறது. சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக இந்த போராட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் அனுமதி அளிக்கவில்லை” என்றார்.

cab

திங்கட்கிழமை போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது, “எதையும் உறுதியாக சொல்ல முடியாது” என்று கூறினார்.
தடை உத்தரவு காரணமாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து செல்லக்கூடாது. பொதுக் கூட்டம், பேரணி உள்ளிட்டவற்றை நடத்தக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடையை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188 படி வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.