பெங்களூரில் wine க்காக ஆன்லைன் மோசடியில் ரூபாய் 93000  இழந்த என்ஜினீயர் -“ஏமாற்றும்  சிட்டி” யாக மாறும் “எலக்ட்ரானிக் சிட்டி “

 

பெங்களூரில் wine க்காக ஆன்லைன் மோசடியில் ரூபாய் 93000  இழந்த என்ஜினீயர் -“ஏமாற்றும்  சிட்டி” யாக மாறும் “எலக்ட்ரானிக் சிட்டி “

உங்களின் card details ,passwords ,PIN  ,CVV ,OTP போன்றவைகளை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று வங்கிகள் பல முறை எச்சரித்தும் ,மக்கள் பலமுறை அவற்றை சொல்லி  ஏமாந்து போகிறார்கள்.

சமீபத்தில் பெங்களூருவில் உள்ள அம்பாலிபுரவில் என்ஜினீயர்களான  டெபாண்டியும் அவரின் நண்பர் சுப்ரஜித்தும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது )இரவு 9.30 மணிக்கு ஆன்லைனில் ரிங் ரோட்டில் உள்ள மதுலோக  wine shop எண்ணுக்கு  போன் செய்து ரூபாய் 850 மதிப்புள்ள  wine பாட்டிலை  வீட்டுக்கு ஆர்டர் பண்ணார்கள் .

உங்களின் card details ,passwords ,PIN  ,CVV ,OTP போன்றவைகளை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று வங்கிகள் பல முறை எச்சரித்தும் ,மக்கள் பலமுறை அவற்றை சொல்லி  ஏமாந்து போகிறார்கள்.

சமீபத்தில் பெங்களூருவில் உள்ள அம்பாலிபுரவில் என்ஜினீயர்களான  டெபாண்டியும் அவரின் நண்பர் சுப்ரஜித்தும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது )இரவு 9.30 மணிக்கு ஆன்லைனில் ரிங் ரோட்டில் உள்ள மதுலோக  wine shop எண்ணுக்கு  போன் செய்து ரூபாய் 850 மதிப்புள்ள  wine பாட்டிலை  வீட்டுக்கு ஆர்டர் பண்ணார்கள் .ஆனால் எதிர்முனையில் பேசிய நிதிஷ் என்பவர் உடனடியாக ஆன்லைனில் பணத்தை கட்டுமாறு கேட்டதற்கு நேரில் கொண்டுவரும்போது கேஷ் ஆக தருகிறோம் என என்ஜினீயர் கூறினார் .

wine bottle

ஆனால் நிதிஷ் பணத்தை credit card மூலம் தான் கட்டமுடியும் , அதனால் உங்கள் card நம்பர் ,CVV ,PIN நம்பர்களை தருமாறு கேட்டு   வற்புறுத்த என்ஜினீயரும் அனைத்து எண்களையும் தந்து விட்டு ஒயினுக்காக காத்திருந்தால் ,அவரது standard charterd bank கணக்கிலிருந்து 31000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது போனுக்கு மெசேஜ் வந்ததை கண்டு அதிர்ச்சியுற்று அது பற்றி ஒயின் ஷாப் நிதீஷிடம் கேக்க ,உடனே அவர் தங்களுக்கு பணம் எதுவும் வரவில்லை ,வங்கியிலிருந்தது reverse ஆகிவிடும் அதனால் bank mistake என்று சொல்ல ,மீண்டும் என்ஜினீயர் கணக்கிலிருந்து இன்னொரு தடவை 31000 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வர அதிர்ச்சியுற்ற என்ஜினீயர் மறுபடியும் நிதீஷிடம் கேக்க ,அவர் வேறொரு கார்டிலிருந்து பணம் அனுப்ப கேக்க ,மேலும்  அதன் pin ,OTP  விவரங்களை கேட்டு அதையும் என்ஜினீயர் தரப்பு ஷேர் பண்ண கடைசியில் 93000 ரூபாயை இழந்து wine னும் கிடைக்காமல் ஏமாந்து போனார்கள் 

credit card fraud

உடனே என்ஜினீயர் சைபர் கிரைம் போலீசை தொடர்பு கொண்டு இந்த மோசடி குறித்து புகார் தந்தார். 
“ஆல்கஹால் வீட்டுக்கு டெலிவரி செய்வது சட்டப்படி குற்றம் “என்ற போலீசார் இந்த மோசடி பற்றி விசாரித்து வருகிறார்கள் .ஆனால் மதுலோக wine ஷாப் தரப்பு எங்கள் வெப்சைட்டிலேயே ஆல்கஹால் door delivery இல்லை என குறிப்பிடப்பட்டிருப்பதை  சுட்டிக்காட்டினார்கள் .இதுபோல இன்னொரு பெலந்தூர் ,மார்த்தஹள்ளியில்  ஒரு மென்பொருள் என்ஜினீயரும் ஆன்லைனில் ஆல்கஹால் ஆர்டர் பண்ணி 1.23 லட்சம் ரூபாயை இழந்துள்ள தகவலும் வெளியாகி எலக்ட்ரானிக் சிட்டியை ஏமாற்றும் சிட்டியாக மாற்றியுள்ளது .