பெங்களூரில் பெற்றோருக்கு காரை பரிசாக கொடுக்க நினைத்த மகன் ! ஆன்லைனில் பணத்தை இழந்த பரிதாபம் !!

பெங்களூரில் பெற்றோருக்கு காரை பரிசாக கொடுக்க நினைத்த மகன் ! ஆன்லைனில் பணத்தை இழந்த பரிதாபம் !!

வசந்த்நகரைச் சேர்ந்த சி.ஏ தேவ் (பெயர் மாற்றப்பட்டது) அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த தேவ் பெங்களூரில் தனது உறவினர்கள் நடத்தி வரும் கடையில் வேலை செய்கிறார்.

பெங்களூரில் 2.5 லட்சத்திற்கே கார் கிடைக்கும் என்று ஆன்லைனில் வந்த மோசடி விளம்பரத்தை நம்பிய ஒருவர் 91 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

வசந்த்நகரைச் சேர்ந்த சி.ஏ தேவ் (பெயர் மாற்றப்பட்டது) அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த தேவ் பெங்களூரில் தனது உறவினர்கள் நடத்தி வரும் கடையில் வேலை செய்கிறார்.

online-shoppings-scam-7

“ஒரு ஆன்லைன் விளம்பரத்தில் தன்னை இராணுவ வீரர் விஷால் கரே என்று அடையாளம் காட்டிய நபர் தனது மஹிந்திரா பொலெரோவை ரூ.2.5 லட்சத்திற்கு விற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் கார் கிடைக்கிறது என்பதால் தேவ் அந்த வாகனத்தை வாங்கி பரிசாக அளித்து பெற்றோரை ஆச்சரியப்படுத்த விரும்பினார்.
இதையடுத்து கார் விற்பதாக கூறும் நபரை தொலைபிசயில் தொடர்பு கொண்டு எஸ்யூவியை ரூ.2.5 லட்சத்திற்கு வாங்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து காரை கொரியரில் அனுப்பு ரூ.5,150 கட்டணம் கேட்டுள்ளார் அந்த நபர். மேலும் தன்னுடைய சொந்த கணக்கு ராணுவத்தில் சம்பள கணக்கு என்பதால் அதில் பணம் போடக்கூடாது என்று கூறி வேறு ஒரு பேடிஎம் எண்ணை கொடுத்துள்ளார். பின்னர் அவர் கேட்ட தொகையை Paytm மூலம் செலுத்தியுள்ளார். பின்னர் காருக்கு வரி செலுத்தவேண்டும் என ஏதோதோ காரணம் சொல்லி பல பரிவர்த்தனைகளில் ரூ.91,650 ஐ பறித்துவிட்டார் அந்த மோசடி நபர்.
அதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்த தேவ் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.