பூர்வீகத்தை அறிந்து கொள்ள இந்தியா வந்த ஆஸ்திரேலியர்கள்; மகிழ்ச்சியில் திளைத்த மக்கள்!

 

பூர்வீகத்தை அறிந்து கொள்ள இந்தியா வந்த ஆஸ்திரேலியர்கள்; மகிழ்ச்சியில் திளைத்த மக்கள்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று பேர் தங்களது முன்னோர்களின் பூர்வீகத்தை பற்றி அறிந்துகொள்ள இந்தியாவுக்கு வந்து மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று பேர் தங்களது முன்னோர்களின் பூர்வீகத்தை பற்றி அறிந்துகொள்ள இந்தியாவுக்கு வந்து மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த சூசன் க்ளாஸ்ஃபர்டு (77) மற்றும் பீட்டர் க்ளாஸ்ஃபர்டு (87) சிறு வயதில் இருந்தே இந்தியாவின் மீது பெரும் ஈர்ப்பு இருந்துள்ளது. அவர்களது தந்தை, தந்தையின் சகோதரர்கள், பாட்டனார் என அனைவருமே இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள். மகாராஷ்டிர மாநிலத்தில், அவர்களின் குடும்பத்தின் பூர்வீகம் அமைந்திருந்ததை அவர்களின் தந்தை கூறியுள்ளார். அதன் படி தங்கள் தாத்தாவின் பெயரில் மகாராஷ்டிராவில் ஒரு கிராமம் இருப்பதைத் தெரிந்து கொண்ட அவர்கள், அதை வைத்து தங்கள் பூர்வீக இடங்களைக் கண்டுபிடிக்க இந்தியா வந்துள்ளனர். 

170 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தங்களது குடும்பத்தினர் வாழ்ந்த இடங்களைப் பார்க்க சூசன், பீட்டர் மற்றும் அவரது மனைவி ஆகிய மூவரும் பல்வேறு கிராமங்களுக்குப் பயணம் செய்துள்ளனர். கடைசியாக ஜெய்ப்பூருக்கு வந்த அவர்களை  வாகன ஓட்டுநர் ஒருவர், அவர்கள் தாத்தாவின் பெயரில் உள்ள அந்த கிராமத்தை கண்டுபிடித்து அழைத்துச் சென்றுள்ளார். 

‘க்ளாஸ்ஃபர்டு பேத்தா’ என்ற அந்தக் குக்கிராமத்திற்கு நீண்ட நேர பயணத்திற்கு பிறகு கிராமத்தை சென்றடைந்த அவர்களை, அங்கு ராஜமரியாதையுடன் மக்கள் வரவேற்றதாகக் கூறுகின்றனர். இது குறித்து கூறியுள்ள அவர்கள், ‘நாங்கள் யார் என்று தெரிந்தவுடன் அங்குக் கூட்டம் கூடியது. நேரம் ஆக ஆக, கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. அவர்கள் அனைவரும் எங்களை வரவேற்று உதவி செய்தார்கள். அங்குள்ள வீடுகளைச் சென்று பார்த்து, பலரிடம் எங்கள் குடும்பத்தைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தோம். அங்குள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் எங்களுக்கு மேலும் சில தகவல்களைக் கொடுத்து உதவினார்’என அவர்கள் கூறினர்.

‘எங்கள் மூதாதையர்களுக்கு இந்தியாவில் உள்ள அசைக்க முடியாத தொடர்பு பற்றி, இங்கு வந்த பிறகு தான் எங்களுக்கு முழுவதும் புரிந்தது. எங்கள் வாழ்வில், இந்தப் பயணத்தை என்றுமே நாங்கள் மறக்க மாட்டோம்’ என்று அவர்கள் பெருமையுடன் தெரிவித்தது காண்போரை மகிழ்ச்சியில் திளைத்தது.