பூர்விகா ஷோரூம் வாசலில் போனைக் கொழுத்திய நபர்… யார் சொல்வது உண்மை!?

பூர்விகா ஷோரூம் வாசலில் போனைக் கொழுத்திய நபர்… யார் சொல்வது உண்மை!?

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நபர் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர் ஆவதாகவும், அது பற்றிக் கேட்டால் சம்பந்தப்பட்ட பைக் நிறுவனம் ரெஸ்பான்ஸ் பண்றதே இல்லை என்று கொந்தளித்து ஷோரூம் வாசலிலேயே பெட்ரோல் ஊத்தி கொழுத்திய சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

சோஷியல் மீடியாவில் அந்த செய்தி தீயாகப் பரவியதும்,பதறிப்போன நிறுவனம் உடனடியாக அவருக்கு ஒரு புது பைக்கைக் கொடுத்து அந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வச்சது.

அப்படி ஆகாத பொருளை கொழுத்தினால் ரீ பிளேஸ் பண்ணுங்கன்னு நம்பி இரண்டு நாளுக்கு முன்னாள் ஒரு மொபைல் ஷோரூம் வாசலில் புது போனை ஒருவர் தீயிட்டு கொழுத்திய வீடியோ இரண்டு நாளாக வைரலானது.

phone

அது குறித்து சம்பந்தப்பட்ட பூர்விகா மொபைல் நிறுவனம் தங்கள் தரப்பு விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.பஞ்சாயத்தைக் கூட்டிய நபரின் பெயர் தலைமாலை.தாம்பரம் அருகிலுள்ள கடப்பேரியைச் சேர்ந்தவர்.மகனுக்கு கிஃப்டாக கொடுப்பதற்காக 14 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்கியிருக்கிறார். வாங்கும் போது பக்காவாக இருந்திருக்கிறது. 

cell phone

சில நாட்கள் ஆன நிலையில் சிம் கார்டு தொடர்பா பிரச்சினை என்று போயிருக்கிறார்.போன் உடைந்திருப்பதாகவும்,சர்விஸ் செண்டருக்கு போக சொல்லி அங்கிருந்த ஆட்கள் சொல்லியிருக்கிறார்கள்.எனக்கு புது போன் குடுத்தாதான் போவேன் என்று அடம்பிடித்திருக்கிறார்! அதுக்கு பூர்விகா தரப்பு ஒப்புக்கொள்ளாததால்,போன்,வாங்கிய பில் இரண்டையும் கொழுத்தியிருக்கிறார் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட நபர் போனை தீ வைத்து கொழுத்தாமல் இருந்திருந்தால் போன் உண்மையிலேயே உடைந்திருக்கிறதா இல்லையா என்று சமூகத்துக்கு நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கும்! இப்படிக் கொழுத்தாமல் விட்டிருந்தால் பூர்விகாவும் தானாக முன்வந்து விளக்கம் சொல்லியிருக்காது! 

டெலிகேட் பொசிஷன்…