பூரியும் குடல் குழம்பும் சாப்பிட்டதுண்டா…அவிநாசி அண்ணா உணவகத்துக்கு வாங்க!

 

பூரியும் குடல் குழம்பும் சாப்பிட்டதுண்டா…அவிநாசி அண்ணா உணவகத்துக்கு வாங்க!

கோழி குடலை சுட்டுத்திங்கனும்,ஆட்டுக் குடலை ஆக்கி திங்கணும் என்பது கொங்கு தேச சாப்பாட்டு பழமொழி! அதிலும்,அவினாசி அண்ணா உணவகத்துல ஞாயிறு காலைல சாப்பிடனும்னு சேத்துக்கலாம்.அப்படி ஒரு அபார காம்பினேசன் தருகிறார்கள் அங்கே.

கோழி குடலை சுட்டுத்திங்கனும்,ஆட்டுக் குடலை ஆக்கி திங்கணும் என்பது கொங்கு தேச சாப்பாட்டு பழமொழி! அதிலும்,அவினாசி அண்ணா உணவகத்துல ஞாயிறு காலைல சாப்பிடனும்னு சேத்துக்கலாம்.அப்படி ஒரு அபார காம்பினேசன் தருகிறார்கள் அங்கே.

58 வருடங்களுக்கு முன்னால் தங்கள் அப்பாரைய்யன் ஆரம்பித்ததாக சொல்லும் பேரன், தாத்தா சைவமாக துவங்கிய உணவகத்தை இப்போது நான் வெஜ் ஹோட்டலாக்கிவிட காலையிலேயே கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் வந்து குவிகிறார்கள்.

வாரத்தின் மற்ற ஆறு நாட்களும் காலை உணவாக சாதாரணமாக எங்கும் கிடைக்கும்,இட்லி தோசை,பொங்கல்,பூரி என சைவ பிரேக்ஃபாஸ்ட்தான்.ஞாயிறு காலையில் மட்டும்தான் சில டெட்லி காம்போக்கள் செய்கிறார்கள்.வீட்டில் செய்த காரமில்லாத மசாலா மட்டுமே சேர்த்த தலைகறி வறுவல்,குடல் வறுவல்,குடல் குழம்பு செய்து இட்லிக்கும் பூரிக்கும் சைட் டிஷ்சாகத் தருகிறார்கள்.அதுவும் எப்படி?

ஒரு குண்டாவில் குடல் குழம்பை  ஊற்றி கொன்டுவந்து உங்கள் டேபிளில் வைத்துவிடுகிறார்கள். அதுவோ இட்லிகளையும் பூரிகளையும் கொண்டுவா, கொண்டுவா என்கிறது..கூடவே வழக்கமான சட்டினியும் உண்டு.ஆனால்  உங்கள் மனசும்,வயிறும் கோனாமல் திருப்தியாக சாப்பிட வேண்டுமானால் ஞாயிறு காலை எட்டு மணிக்கே ஆஜராகி விடுங்கள்.

ஒரு சராசரி வெள்ளாட்டில் 1 ½ கிலோ குடல்தான் கிடைக்குமாம். இவர்கள் பத்து ஆட்டு குடல் தான் வாங்குகிறார்களாம். ஒரு பிளேட்டிற்கு 200 கிராம் கறி என்று வைத்துக்கொண்டால் முதல் 75 அதிர்ஷ்டக்காரர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். தலைக்கறி  பரவாயில்லை, 9.30 வரை கிடைக்கிறது.மதிய உணவு எல்லா நாளும் அசைவம் தான்.கிடைக்கும் போது மட்டும்தான் மீன் செய்வார்களாம்.

food

திங்கள் கிழமை சிக்கன் பிரியாணி,செவ்வாய் நாட்டுக்கோழி பிரியாணி,புதன் மற்றும் வியாழகிழமைகளில் மட்டன் பிரியாணி,வெள்ளிக்கிழமை காளான் பிரியாணி,சனியன்று வெஜ் பிரியாணி என்று வெரைட்டி காட்டுகிறார்கள்.இது தவிர மீன்குழம்பு,மட்டன் குழம்பு,சிக்கன் குழம்பு,நாட்டுக்கோழி ஃபிரை,மீன் வறுவல் என அமோகமான சுவையில் சாப்பாடும் கிடைக்கும்.

இனி அந்தப்பக்கம் போனால் அண்ணா உணவகத்துக்குப் போகவும்,பூரி குடல் குழம்பு காம்பினேஷனை ஒரு கைபார்க்கவும் தயங்காதீர்கள்.கடைசியாக கொஞ்சம் சரித்திரம், இந்த அண்ணா உணவகத்துக்கு காமராஜரும் வந்திருக்கிறார். இதே தெருவில் இருக்கும் கூட்டுறவு வங்கி கால்கோள் விழாவிற்கு வந்த காமராசர் இந்த ஹோட்டலில் வந்து காலை உணவும் ,ஒரு காஃபியும் அருந்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: பரங்கிக்காய் கூட்டு