பூராடம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம்

 

பூராடம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம்

பூராட நட்சத்திரக்காரர்கள் தனது ஜென்ம நட்சத்திர தினத்தில் திருநாவலூரில் உள்ள பக்தஜனேஸ்வரர், மனோன்மணி தாயையும் அபிஷேக,அர்ச்சனை செய்து வழிபட சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் .

திருநாவலூர் சுந்தரரின் அவதார ஸ்தலம் இது ஆகும்.இங்கு சுந்தரர் தனது இரு மனைவிகளான பறவை நாச்சியார்மற்றும் சங்கிலி நாச்சியார் ஆகியோர் சூழ எதிரில் வெள்ளை யானை நிற்க கையில் தாளம் ஏந்தி காட்சி தருகிறார்.

சுந்தரர் பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது.இந்த கோயிலின் வெளிப் பிராகாரத்தில் தலமரம் ‘நாவல்’ இரண்டு உள்ளன.மேலும் அம்பாள் கோயில் கிழக்கு நோக்கி இங்கு தனியே அமைந்துள்ளது. அழகான முன் மண்டபமும் சிறப்பாக அமைந்துள்ளது.அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் திருக்கோலமாக நின்று காட்சி அளிக்கிறார்.

கோயிலுக்கு அருகே சுந்தரர் மடாலயம் உள்ளது.சுந்தரர் கையிற் செண்டுடன் அழகாகக் காட்சி தருகின்றார்.இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படும். இது முதற்பராந்தகனின் முதல் மகன், இராசாதித்தனால் கட்டு விக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

பங்குனி  23 முதல் 27 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் கருவரையில் உள்ள மூலவர் மீது படுகின்றது.

“கோவல னான்முகன் வானவர் கோனுங் குற்றவேல் செய்ய
மேவலர் முப்பரந்தீ யெழுவித்தவன்ஓர் அம்பினால்
ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை யாளுங் கொண்ட
நாவலனார்க்கு இடமாவது நந் திருநாவலூரே.”
(சுந்தரர்)

ஆவலூர் எங்களுடை யாரூர னாரூராம்
நாவலூர் ஞானியருண் ஞாபகமே.’

(அருட்பா)

சுக்ரன் வழிபட்ட தலம்:

நட்சத்திர தேவதை: வருணன், நட்சத்திர அதிதேவதை : இந்திரன்

இறைவன் – பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்.

இறைவி – மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை

தலமரம் – நாவல்.

தீர்த்தம் – கோமுகி தீர்த்தம்.

இருப்பிடம் :

விழுப்புரத்தை அடுத்த உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாகச் செல்லும் பண்ருட்டி சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.