பூரம் நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்!

 

பூரம் நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்!

பூர நட்சத்திரகாரர்களின் இயல்பான குணாதிசயங்கள் பற்றியும் வழிபாட்டு கோயில்கள் பற்றியும் பார்போம்.

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோறாவது இடத்தை பெறுவது பூர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது.

இந்த நட்சத்திரம் இரண்டு கண்களின் கருமணிகள் போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் ஆகும்.

sivan

இயற்கை உணவுகளை விரும்பி உண்பார்களாகவும். பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைபவர்களாகவும் இருப்பார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு ஏற்படும்.

இந்த நட்சத்திரகாரர்கள் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள் என்றும் ஏற்றுமதி இறக்குமதியால் ஆதாயம் பெறுபவர்கள் என்றும் கல்வியில் அக்கறையுள்ளவர்கள் என்றும் நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

vishnu

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரம் கொண்டவர்களாகவும். எப்போதும் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டு இருப்பார்களாகவும் இருப்பார்கள். 

இவர்கள் அடிப்படையில் கருணை மனம் கொண்டவர்களாகவும் . இவர்களது இனிமையான பேச்சால் மற்றவர்களை எளிதில் வெற்றி கொள்வார்களாகவும் விளங்குவார்கள்.

இவர்கள் தாய், தந்தையரைப் பேணக் கூடியவர்களாகவும் எப்போதும் பம்பரமாகச் சுழலக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

vishnu

அறிவுக் கூர்மையும், பகைவரை வெல்லக்கூடிய திறமையும் பெற்றிருப்பார்கள். கடினமான உழைப்பால் சம்பாதித்துப் புகழ் பெறுவார்கள். ஆடை, அணிகலன் அணிவதில் ஆர்வம் அதிகமுள்ளவர்கள்.

தான தர்மங்கள் செய்து அதனால் புகழும் பெருமையும் அடைய ஆசையுள்ளவர்கள்.எதையும் எதிர்த்துப் போராடி, எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். இவர்கள் நண்பர்களை நேசிப்பவர்களாக இருப்பார்கள்.

dimond

வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவார்கள்.வாகனங்களை வேகமாக இயக்கக்கூடியவர்களாகவும் பயணப் பிரியர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களது ஜென்ம நட்சத்திர நாளில் கீழே கொடுக்கபட்டுள்ள பரிகார கோயில்களுக்கு சென்று வந்தால் சகல விதமான நன்மைகளையும் பெறலாம்.

வழிபடவேண்டிய தெய்வம் : சிவன், விஷ்ணு,விநாயகர்,ஆண்டாள்.

வழிபாட்டு கோயில்கள் : பிள்ளையார்பட்டி ,ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், ஸ்ரீரங்கம்,ஸ்ரீ வாஞ்சியம்.