பூரண சந்திர கிரகணம்… இதையெல்லாம் செய்யாதீங்க!

 

பூரண சந்திர கிரகணம்… இதையெல்லாம் செய்யாதீங்க!

ஒரே நேர்கோட்டில் சூரியன், பூமி, சந்திரன் வரும் போது பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திர கிரகணம் உண்டாகிறது.  அப்படி உருவாகும் சந்திரகிரகணத்தின் போது சில விஷயங்களை அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் தவிர்த்து விட வேண்டும் என்கிறார்கள்.  நாளை நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்த வருஷத்தின் இரண்டாவது சந்திரகிரகணம். இந்தியாவை

ஒரே நேர்கோட்டில் சூரியன், பூமி, சந்திரன் வரும் போது பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திர கிரகணம் உண்டாகிறது.  அப்படி உருவாகும் சந்திரகிரகணத்தின் போது சில விஷயங்களை அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் தவிர்த்து விட வேண்டும் என்கிறார்கள்.  நாளை நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்த வருஷத்தின் இரண்டாவது சந்திரகிரகணம். இந்தியாவை பொறுத்தவரை நாளை இரவு சரியாக 12.13 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம் பின்பு, நள்ளிரவு 1.31 மணிக்கு உச்சம் அடைந்து, இரவு 3 மணிக்கும், பின்னர், 4.30 மணிக்கு முடிகிறது.

full moon

ஒட்டு மொத்தமாக சுமார் 5 மணி நேரம் இந்த கிரகணம் நடைபெறவுள்ளது.சாஸ்திரங்களின் கூற்றுப்படி சந்திர கிரகண காலத்தில் நாம் செய்யும் மந்திர ஜபங்களுக்கு சக்திகள் அதிகம். சாதாரண நாளில் நாம் செய்யும் ம் மந்திர ஜபங்கள், சந்திரகிரகணத்தின் போது ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன்களைத் தரும். ஊரே ஒன்று கூடி கிரகணம் முடிந்ததும், அடுத்த நாள் தர்ப்பணம் கொடுக்கிறார்கள் என்று நீங்களும் கிளம்பாதீர்கள். தந்தை இருப்பவர்கள் நிச்சயமாக தர்ப்பணம் கொடுக்க கூடாது. 
கிரகணம் தொடங்குவதற்கு சுமார் ஒன்பது மணி நேரத்துக்கு முன்பாகவே இரவு உணவை முடித்து விடுங்கள். அதன் பிறகு கிரகணம் முடியும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. கூடுமானவரை கிரகண காலங்களில் நீர் அருந்துவதையும் தவிர்த்து விடுங்கள். சமைத்த உணவுகளை வெளியில், திறந்து வைக்காதீர்கள்.

full moon

கிரகண காலத்திற்கு முன்பு சமைத்த உணவை கிரகணத்திற்குப் பிறகு பயன்படுத்தக் கூடாது. அவசியம் கிரகண காலத்திற்கு பிறகு பயன்படுத்த வேண்டிய உணவுப் பொருட்களோ, நீரோ இருந்தால், அவற்றின் ஒரு துண்டு தர்ப்பை புல்லை போட்டு வைத்து பயன்படுத்துங்கள்.