பூரட்டாதி நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்!

 

பூரட்டாதி நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்!

பூரட்டாதி நட்சத்திரகாரர்களின் இயல்பான குணாதிசயங்களும் அவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்களை பற்றியும் பார்போம்.

பூரட்டாதி நட்சத்திரமானது இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்து ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களும் கும்ப இராசியிலும் நான்காவது பாதம் மீன இராசியிலும் அமைந்துள்ளது.

siva

இந்த நட்சத்திரகாரர்கள் கடவுள் மேல் மிகுந்த பக்தி கொண்டிருப்பார்கள். இவர்களது நம்பிக்கை தூய்மையானது என்பதால் மற்றவருக்கு எப்போதும் உதவ தயாராக இருப்பார்கள் .

பணத்தை சேர்ப்பதை விட மற்றவர்களிடம் நம்பிக்கையையும் மரியாதையையும் சேர்ப்பதை மட்டுமே தங்களது வாழ்நாள் சாதனையாக எண்ணி இருப்பார்கள் . 

இவர்களுக்கு மனதில் எப்போதும் பெரிய சிந்தனைகள் பிறக்கும். இந்த நட்சத்திரகாரர்களுக்கு தொலைநோக்குச் சிந்தனை அதிகம் உண்டு. உண்மையை பேசுவதையும் உண்மையாக நடப்பதையும் விரும்புவார்கள்.

siva

மற்றவர்களை ஏமாற்றுவது மற்றும் பொய் கூறுவது ஆகியவற்றிலிருந்து தள்ளியே இருப்பார்கள். யாராவது கஷ்டத்தில் இருந்தால் ஓடி சென்று உதவும் தாராள குணம் படைத்தவர்கள் இந்த நட்சத்திரகாரர்கள். 

இவர்கள் பனி, புயல், வெயில், மழை ஆகியவற்றைப் பார்க்காமல் கடுந்தவம் புரியும் சித்தர்களைப் போல சுற்றுப்புறச் சூழ்நிலையால் பாதிக்கப்படாதவர்கள். உயர்ந்த குணமும் சகஜமாக அனைவரிடம் பழகும் இயல்பும் கொண்டவர்கள்.

நட்பில் நேர்மையும் பாரபட்சதன்மையற்றும் இருப்பார்கள். தூய்மையான மனமும் நல்ல நடத்தையும் கொண்டு இருப்பார்கள். கல்வியும் ஞானமும் கொண்டவராக விளங்குவார்கள்.

lakshmi

இந்த நட்சத்திரகாரர்கள் அனைத்தையும் அறிந்திருந்தும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களுடைய கருத்து தான் சரி என்று வாதிடாமல், மாற்றார் கருத்துக்கும் மதிப்பளிப்பார்கள். இவர்கள் மற்றவர்களைப் பற்றி யோசிப்பவராகவும், அவர்கள் நலனில் அக்கறைகொள்பவராகவும் இருப்பார்கள்.

தாய் தந்தைக்கு ஏற்ற மகனாகவும், சகோதர சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்களாகவும் இருப்பார்கள். யாருடைய சொத்துக்கும் ஆசைபடமாட்டார்கள். அது போல தங்களுடைய சொத்தையும் யாருக்கும் விட்டு கொடுக்கவும் மாட்டார்கள்.

சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சங்கங்கள் வைத்து நடந்துவார்கள். இயல்,இசை, இலக்கியத்தில் ஈடுபாடும், மதம் சார்ந்த கல்வி துறைகளிலும் தலைவர்களாக பணிபுரிவார்கள்.

pushparagam

பூரட்டாதி நட்சத்திரகாரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள தேமா மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது இந்த நட்சத்திரகாரர்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய சித்தர் ஜோதிமுனி சித்தர் ஆவார் . இந்த சித்தரின் ஜீவ சமாதிக்கு உங்களது ஜென்ம நட்சத்திரதினத்தில் சென்று வழிபாடு செய்வதால் சகல நன்மைகளையும் பெறலாம்.

வழிபட வேண்டிய தெய்வம் : சிவன், முருகன்,தட்சிணாமூர்த்தி.

வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள் : திருக்கோளிலி,பெரிச்சி கோயில்,திருப்பட்டூர்,திருவானைக்காவல்.