பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரண நலத்துக்காக தரிசிக்க வேண்டிய கோயில்கள்

 

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரண நலத்துக்காக தரிசிக்க வேண்டிய கோயில்கள்

ரங்கநாதபுரம் ஶ்ரீதிருவானேஸ்வரர் கோயில் 

பூரட்டாதி:

tem

கோயில்: ரங்கநாதபுரம் ஶ்ரீதிருவானேஸ்வரர் கோயில் 
அம்மன்: ஶ்ரீகாமாட்சி
தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் ஶ்ரீதிருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார். 
சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை7-9, மாலை 5.30-இரவு 7

உத்திரட்டாதி:

tem

கோயில்: தீயத்தூர் ஶ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீபெரியநாயகி
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் “சகஸ்ரலட்சுமீஸ்வரர்’ என்று பெயர் வந்தது. “சகஸ்ர’ என்றால் “ஆயிரம்’. 
சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும். 
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 12

ரேவதி:

tem

கோயில்: காருகுடி ஶ்ரீகைலாசநாதர் கோயில்
அம்மன்: ஶ்ரீபெரியநாயகி
தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. “கார்’ எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு “காருகுடி’ என்ற பெயர் உண்டானது. 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான். 
சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். 
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை5- இரவு8