பூனைகளையும் கொரோனா தொற்று பாதிக்கும் என ஆய்வில் தகவல்

 

பூனைகளையும் கொரோனா தொற்று பாதிக்கும் என ஆய்வில் தகவல்

பூனைகளையும் கொரோனா தொற்று பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெய்ஜிங்: பூனைகளையும் கொரோனா தொற்று பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 16 லட்சத்து 99  ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

cats

கொரோனா தொற்று விலங்குகளுக்கு பரவுமா என்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், மனிதர்களை போன்றே பூனைகளையும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் பூனையிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுமா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.