பூட்டை உடைத்தே தீருவேன்; ஆவேசப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கைது

 

பூட்டை உடைத்தே தீருவேன்; ஆவேசப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கைது

தயாரிப்பாளர்கள் சங்க அலுவலக பூட்டை அகற்ற முயன்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கைது செய்யப்பட்டார்.

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க அலுவலக பூட்டை அகற்ற முயன்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கைது செய்யப்பட்டார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் பல முக்கிய விஷயங்களில் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், ஒரு சில தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து சென்னை தி.நகரில் ள்ள சங்க அலுவலகம் முன்பு கூடிய டி.சிவா, கே.ராஜன், .எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர் உள்ளிட்டோர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

TFPC

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க அறைகளுக்கு பூட்டு போட்டதோடு மட்டுமின்றி, விஷால் உடனடியாக நேரில் வரவேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சட்டவிரோதமாக போடப்பட்ட பூட்டுகளை அகற்ற தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் முயற்சித்தார். இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கும் விஷாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, விஷால் கைது செய்யப்பட்டார்.

vishal

அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தருத்ததாக கூறி கைது நடவடிக்கை மேற்கொண்டதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும், விஷாலை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இருந்த நடிகர் மன்சூர் அலிகானையும் போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். இதனால் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.