பூஜையுடன் தொடங்கியது தளபதி64…. டிவிட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

 

பூஜையுடன் தொடங்கியது தளபதி64…. டிவிட்டரில்  ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி 64  படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியுள்ளது. 

தளபதி 64  படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியுள்ளது. 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை  மாநகரம் பட இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

vijayஇவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

vijay

த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

thalapathy

இந்நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று நடைபெற்றுள்ளது. இதனால் #Thalapathy64Pooja என்ற ஹேஷ்டேக்கை   விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.