பூஜைக்கான பூக்களை எப்படி தேர்ந்தெடுத்து தொடுக்க வேண்டும்?

பூஜைக்கான பூக்களை எப்படி தேர்ந்தெடுத்து தொடுக்க வேண்டும்?

பெரும்பாலான வீடுகளில், தினந்தோறும் சமையலுக்கான காய்கறிகளை நறுக்குவதற்கே நேரம் இல்லாமல் பொருளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இறைவனுக்கான பூக்களை எல்லாம் நாம் எங்கே தொடுப்பது என்று நீங்கள் மனதுள் யோசிப்பது இங்கே வரைக்கும் எதிரொலிக்கிறது. கூடுமானவரை விசேஷ நாட்களில், உங்கள் பிறந்தநாள் வழிபாட்டில் என்று கொண்டாடும் போதாவது பூக்களை நீங்களே தேர்ந்தெடுத்து தொடுத்து வழிபட்டு வாருங்கள். அதற்கு பலன்கள் அதிகம். 

கோவிலில் தெய்வங்களுக்கு கொண்டு செல்லும் பூவை ஏன் நம் கையால் தொடுக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்களும் நமது ஆன்மிகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே வேறொருவர் தொடுத்த பூக்களையே முழம் இத்தனை என்று வாங்கிக் கொடுப்பதில் பெரிதாக பலன்கள் கிடையாது!
நம் கைகளால் தொடுப்பதே சிறந்தது.  ஆண்டாள் தாம் தொடுத்த பூக்களின் வழியாகவே அரங்கனை ஆராதித்து, தம் விருப்பங்களை சொல்லி நிறைவேற்றிக் கொண்டாள் என்பது வரலாறு.  உதிரிப்பூக்களை வீட்டில் வைத்து ஸ்லோகங்களுடன் கூட நமது பிரார்த்தனைகளையும் கூறிக்கொண்டே தொடுக்க வேண்டும். பூத்தொடுக்கும் போது வீண் பேச்சுக்கள், விவாதங்களை தவிர்க்க வேண்டும். இறைவன் அதை சூடிக்கொள்ளும் போது நாம் தொடுக்கின்ற பூக்கள் நம் பிரார்த்தனைகளை இறைவனிடம் சமர்ப்பிக்கும் என்பது ஆன்மிக அன்பர்களின் கருத்து.

வீட்டில் பூஜை செய்யும் போது, பூக்களை சுவாமியின் பாதத்தில் மட்டுமே விழுவது போல் அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் அஷ்டோத்திர நாமம் அல்லது சகஸ்ர நாமம்  சொல்ல வேண்டும். பூக்களை கையில் எடுக்கும் போது கட்டை விரல், நடுவிரல், மோதிர விரல்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆள்காட்டி விரல், சுண்டுவிரல் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும். நாமும் நம் கைகளாலேயே பூக்களை தொடுத்து வேண்டுதல்களை நேரடியாக இறைவனிடம் சமர்ப்பிப்போம்.